உஷார்... சென்னையில் நாளை முதல் புதிய நேர அட்டவணை... மின்சார ரயில், ஏ.சி. மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

 
ஏசி மின்சார ரயில்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் குளிர்சாதன (AC) மின்சார ரயில்களின் சேவையை மேம்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வே நேர மாற்றங்களையும் கூடுதல் நிறுத்தங்களையும் அறிவித்துள்ளது.

ஏ.சி. மின்சார ரயில் சேவை மாற்றங்கள்: கடற்கரை ➡️ தாம்பரம்: மாலை 3.47 மணிக்குக் கடற்கரையிலிருந்து புறப்படும் ஏ.சி. ரயில், மாலை 4.42-க்குத் தாம்பரம் சென்றடையும். (இது நாளை முதல் கடற்கரை - தாம்பரம் இடையே மட்டுமே இயக்கப்படும்). தாம்பரம் ➡️ கடற்கரை: மாலை 5.00 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 5.55-க்குக் கடற்கரை வந்தடையும். மதியம் 2.28 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்படும் ஏ.சி. ரயில், மாலை 3.23 மணிக்குக் கடற்கரை சென்றடையும்.

ஏ.சி. மின்சார ரயில்

பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாளை முதல் அனைத்து ஏ.சி. மின்சார ரயில்களும் (தாம்பரம்-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-கடற்கரை வழித்தடங்கள்) ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. ரயில்களின் நேர மாற்றத்தால், சாதாரண மின்சார ரயில்களின் நேரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: திருமால்பூர் - கடற்கரை: தாம்பரத்திற்கு மதியம் 1.10 மணிக்கும் (முன்பு 1.15), கடற்கரைக்கு 2.05 மணிக்கும் (முன்பு 2.10) சென்றடையும். தாம்பரம் - கடற்கரை (மாலை நேர ரயில்கள்): மாலை 4.35, 4.52 மற்றும் 5.00 மணிக்குப் புறப்படும் ரயில்கள் முறையே 5 முதல் 15 நிமிடங்கள் முன்னதாகப் புறப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி - கடற்கரை: இரவு 10.40-க்குப் புறப்பட வேண்டிய ரயில், இனி இரவு 10.10-க்கே புறப்படும்.

மின்சார ரயில்

செங்கல்பட்டு - கடற்கரை: இரவு 10.20-க்குப் புறப்படும் ரயில், நள்ளிரவு 12.15-க்குக் கடற்கரை சென்றடையும். நாளை முதல் வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த நேர மாற்றத்தைக் கவனித்துத் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!