உஷார் மக்களே... இன்று முதல் ஏடிஎம்மில் இவை எல்லாவற்றுக்குமே கட்டணம் வசூலிக்கப்படும்!
மறந்துடாதீங்க மக்களே... இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏடிஎம் மையங்களில் பேலன்ஸ் செக் பண்ணாலும் கட்டணம் உண்டு. வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான விதிகளில், நள்ளிரவு முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இது நாள் வரையில் ஏடிஎம் மையங்களில் பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், இனிமேல் பணம் சாராத இதர சேவைகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிமுறைகளின் படி, ஒரு மாதத்திற்கான இலவசப் பரிவர்த்தனை வரம்பிற்குள் பணம் எடுக்காத இதரச் செயல்பாடுகளும் இனி கணக்கில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையின்படி, உங்கள் வங்கிக் கணக்கில் மீதமுள்ள தொகையைப் பார்ப்பது , குறு அறிக்கை பெறுவது மற்றும் ரகசியக் குறியீட்டு எண்ணை மாற்றுவது போன்றவையும் இலவச வரம்பிற்குள்ளேயே சேர்க்கப்படும். ஒரு மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள 5 இலவசப் பரிவர்த்தனைகளைத் தாண்டிய பிறகு, பணம் எடுப்பதற்கு மட்டுமின்றி, மேற்கூறிய ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த மாற்றத்தால் ஏடிஎம் இயந்திரங்களை அடிக்கடி பயன்படுத்தும் சாதாரண மக்கள் கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரிடும்.

இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ஒரு பரிவர்த்தனைக்கான கட்டணம் 21 ரூபாயில் இருந்து 23 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஜிஎஸ்டி வரி தனி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மற்ற வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது பெருநகரங்களில் 3 முறையும், இதர நகரங்களில் 5 முறையும் மட்டுமே இலவசமாகப் பயன்படுத்த முடியும். பணப் பரிவர்த்தனை செய்யாமலேயே ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தினாலும் இனி கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களின் ஏடிஎம் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளவும், அலைபேசி வழிச் செயலிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
