உஷார் மக்களே... பழசையெல்லாம் மறக்காதீங்க... மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா... 3096 பேருக்கு சிகிச்சை!

 
கொரோனா பாதிப்பு

பழசையெல்லாம் மறக்காதீங்க மக்களே... ரொம்ப விழிப்புணர்வுடன் பத்திரமா இருங்க. தேவையில்லாமல் கூட்டத்தில் சிக்காதீங்க. பாதுகாப்பாக இருங்க. கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரளத்தில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3096 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3096 ஆக உயர்ந்துள்ளது. 2 நாட்களில் 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையடுத்து கேரள அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் முகக்கவசங்கள் அணிந்து வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web