உஷார்... பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000... மத்திய அரசின் புதிய திட்டம்?!
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கிறது. பொதுவாக தேர்தல் திருவிழா நேரங்களில் ஆட்சியைப் பிடிப்பதற்காக, மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் அரசியல்வாதிகள். கையில் ஒற்றை செங்கல்லை வைத்துக் கொண்டு, முதல் கையெழுத்தே நீட் ரத்து என்று சொல்லி ஓட்டு கேட்டவர்களை எல்லாம் பார்த்தோம். அதைப் போலவே வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் என்றவர்களையும் பார்த்தோம். அப்படி ‘Women Work from Home Scheme’ என்ற பெயரில் மத்திய அரசு மாதம் ரூ.25,000 வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இப்படியெல்லாம் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று PIB Fact Check தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய அரசு பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்து ஊதியம் வழங்கும் திட்டம் வெளியிடவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என கூறப்பட்டுள்ளது.
போலி தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகமான தகவல்களை 87997 11259 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி உண்மை நிலையை சரிபார்க்கலாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நேரம் என்பதால் அரசியல்வாதிகள் தலையில் மட்டுமல்ல, பொதுமக்களின் காதுகளிலும் பூக்களை சுற்ற எதையாவது செய்வார்கள். அதனால் சிந்தித்து ஓட்டு போடுங்க மக்களே... வழக்கம் போல இலவசமாக தர்றாங்க என்று ஏமாந்து நிற்காதீங்க.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
