உஷார்... சென்னைக்குக் காத்திருக்கும் மிகக் கடுமையானக் குளிர் - வெதர்மேன் அலர்ட்!
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள், தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்துச் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் மாத மத்தியில் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால் விரைவில் வானிலை மாறிச் சென்னையில் மிகக் கடுமையான குளிர் நிலவப் போவதாகவும் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளக் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியே செல்லும்போதுக் குடைகளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுவாக, மேகமூட்டம் காரணமாக பூமியில் இருந்து வெளியேறும் வெப்பம் தடுக்கப்படுவதால், இந்த நாட்களில் இரவு நேர வெப்பநிலைச் சற்று அதிகரிக்கும்; இரவும் காலையும் சற்றுக் குறைவானக் குளிருடனும் ஈரப்பதத்துடனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டி தொடர்ந்து தென் இந்தியாவின் மிகக் குளிர்ந்த மலைப் பிரதேசமாக இருக்கும்.

டிசம்பர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலான நாட்களில் சென்னை மிகக் கடுமையான குளிரைச் சந்திக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை விடத் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் குளிரின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாதத்தில் 20 நாட்களுக்கும், டிசம்பர் மாதத்தின் கடைசி 10 நாட்களிலும் வறண்ட வானிலையே நீடித்தது. வரும் நாட்களில் பெரிய அளவில் மழை எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. மாத இறுதி வரை வறண்ட வானிலையே தொடரும். வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31, 2025 வரை மேலும் 10-20 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையின் காரணமாக, சென்னைக்கு நீர் வழங்கும் அணைகள் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளன என்ற ஆறுதலான தகவலையும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
