உஷார்... இன்று முதல் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்!

 
எக்ஸ்பிரஸ் ரயில்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை) முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை, சென்னை எழும்பூருக்கு வர வேண்டிய 4 முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நடைபெற இருக்கும் பராமரிப்புப் பணிகளுக்காக, இந்த ரயில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றம் நவம்பர் 30 (இன்று) முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

ரயில் எக்ஸ்பிரஸ்

நவம்பர் 30 (இன்று) முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை, எழும்பூர் வரை வர வேண்டிய ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். 

உழவன் விரைவு ரயில்: தஞ்சாவூரிலிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில். அனந்தபுரி அதிவிரைவு ரயில்: கொல்லத்திலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் ரயில்.சேது விரைவு ரயில்: ராமேசுவரத்திலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரயில். விரைவு ரயில்: ராமேசுவரத்திலிருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரயில்.

ரயில்

அதே போன்று தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் ரயில்களின் மறுமார்க்கப் பயணமும் மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை, சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய மேலே குறிப்பிட்ட நான்கு விரைவு ரயில்களும், எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

எனவே, இந்த நாட்களில் மேற்கண்ட ரயில்களில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்கள் பயணத் திட்டத்தை அதற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!