உஷார்... இன்று கடைசி தேதி.. ரூ.5,000 அபராதம் - உரிமம் பெற மறந்துடாதீங்க!

 
செல்லப் பிராணி வளர்ப்பு நாய்

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அதற்கான உரிமத்தை (லைசென்ஸ்) கட்டாயம் பெற வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த உரிமத்தைப் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 14) முடிவடைகிறது. உரிமம் பெறத் தவறுபவர்களுக்கு நாளை முதல் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் உரிமத்தை விரைந்து பெறும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையில் தெருநாய்களின் தொல்லைகள் அதிகரித்து வருவது குறித்து உச்சநீதிமன்றமே கருத்துத் தெரிவித்த நிலையில், சமீபத்தில் மேயர் பிரியா தலைமையில் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த உரிமத்தைப் பெற நவம்பர் 24-ஆம் தேதி முதலில் காலக்கெடு விதிக்கப்பட்டாலும், பின்னர் அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

செல்லப் பிராணி வளர்ப்பு நாய்

உரிமம் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. உரிமம் பெறாதவர்களைக் கண்டறியும் வகையில், நாளை முதல் அதிகாரிகள் வீடு வீடாகச் சோதனை நடத்தி, உரிமம் பெறாதவர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளான இன்று, பொதுமக்கள் எளிதாக உரிமம் பெறுவதற்காகச் சென்னை மாநகராட்சி சார்பில்ப் பல இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் பூனை, நாய்களுக்கான உரிமம், மைக்ரோசிப்பிங் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றைச் செலுத்த முடியும்.

செல்லப் பிராணி வளர்ப்பு நாய்

இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களின் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மணலி தேவராஜன் தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், சுராபேட்டை சண்முகபுரத்தில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி நகரில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், அம்பத்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் அமைந்துள்ள காமராஜர்புரம் தன்லப் மைதானம், கீழ்பாக்கம் கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், ஆலப்பாக்கம், மாந்ததோப்பில் உள்ள கவுன்சிலர் அலுவலகம், வேளச்சேரி (மேற்கு) வார்டு 175-ல் 22வது கிராஸ் தெருவில் உள்ள அம்பேத்கர் நகர் கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், மடிப்பாக்கம் மைலை பாலாஜி நகரில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!