உஷார்... நாளை சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில்கள் ரத்து!
சென்னை ரயில்வே கோட்டத்தில் மீஞ்சூர் மற்றும் அத்திபட்டு இரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் சில மின்சார இரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
நாளை டிசம்பர் 28, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட நேரங்களில் இயக்கப்படும் இரயில்கள் இயங்காது: சென்டிரல் - கும்மிடிப்பூண்டி: காலை 9:00 மணிக்குச் சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார இரயில் ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி - சென்டிரல்: காலை 9:55 மணி மற்றும் 11:25 மணிக்குக் கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டுச் சென்னை சென்டிரல் வரும் இரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
கடற்கரை - கும்மிடிப்பூண்டி: காலை 9:40 மணிக்குச் சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார இரயில் ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - கடற்கரை: காலை 10:55 மணிக்குக் கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டுச் சென்னை கடற்கரை வரும் இரயில் ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள் காரணமாகக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த மார்க்கத்தில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், மேற்கண்ட இரயில் ரத்து அறிவிப்பைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
