உஷார்.. சென்னை சென்டிரல் - சூலூர்பேட்டை ரயில்கள் முழுமையாக ரத்து!

 
மின்சார ரயில்

சூலூர்பேட்டை மற்றும் தடா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 9:10 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதன் காரணமாகப் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்டிரல் - சூலூர்பேட்டை (66029): காலை 5:40 மணி ரயில், சூலூர்பேட்டை - நெல்லூர் (66035): காலை 7:50 மணி ரயில், நெல்லூர் - சூலூர்பேட்டை (66036): காலை 10:20 மணி ரயில், சூலூர்பேட்டை - சென்னை சென்டிரல் (66060): மதியம் 12:35 மணி ரயில், ஆவடி - சென்னை சென்டிரல் (66000): காலை 4:25 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மின்சார ரயில்

எளாவூர் - சூலூர்பேட்டை இடையே சில மின்சார ரயில்கள் இன்று பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன: சென்டிரலில் இருந்து காலை 7:30, 8:35, 10:15 ஆகிய நேரங்களில் சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் எளாவூர் வரை மட்டுமே இயங்கும். சூலூர்பேட்டையில் இருந்து: காலை 10:00, 11:45, மதியம் 1:15 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் ரயில்கள் எளாவூரில் இருந்து மட்டுமே புறப்படும்.

மின்சார ரயில்

வார இறுதி நாளான இன்று ஆந்திரா மற்றும் சென்னை எல்லைப் பகுதிக்குச் செல்லும் பயணிகள் இந்த ரயில் சேவை மாற்றத்தைக் கவனித்துத் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!