பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ரூபா பதவியில் இருந்து நீக்கம்!

 
கோவை

கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ரூபா குணசீலன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் விதிமுறைகளை மீறிய செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் அனுமதியின்றி சில பணிகளை மேற்கொண்டதாக புகார் பதிவு செய்யப்பட்டது.

இந்த புகாரை விசாரிக்க கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பார்த்தசாரதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை முடித்து அறிக்கையை அரசு தரப்புக்கு வழங்கினார்.

அறிக்கையைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை செயலாளர் சங்கரன், ரூபா குணசீலனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இதன்படி பல்கலைக்கழக பதிவாளர் ராஜவேல் அதிகாரப்பூர்வமாக பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!