பாரதிராஜா நலமாக இருக்கிறார்... வதந்தியை நம்பாதீங்க... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
பாரதிராஜா

மூச்சுவிடுவதில் ஏற்பட்ட திடீர் சிரமம் காரணமாக இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா

சமூக வலைதளங்களில் பரவி வரும் ‘மிகவும் கவலைக்கிடம்’ போன்ற செய்திகள் உண்மையல்ல என அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதாரமற்ற தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாரதிராஜா

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான பாரதிராஜா விரைவில் முழு குணமடைந்து வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வந்த தகவல் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!