இன்று போகி கொண்டாட்டம்: இந்திரனின் கர்வத்தை அடக்கிய கிருஷ்ணர்.. இது தான் சரியான வழிபாட்டு முறை!

 
இந்திரன்

பொங்கல் திருவிழாவின் தொடக்கமே 'போகி' தான். நம்மிடம் இருக்கும் தேவையற்ற எண்ணங்களையும், தீய பழக்கங்களையும் போக்கி, புதிய மனிதர்களாக மாற வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் உண்மையான தத்துவம்.

முன்பு இந்தப் பண்டிகை 'போக்கி' என்றே அழைக்கப்பட்டது. அதாவது வீட்டில் உள்ள குப்பைகளையும், மனதில் உள்ள அழுக்குகளையும் அகற்றிப் 'போக்குவதால்' இப்பெயர் பெற்றது. இதுவே நாளடைவில் மருவி 'போகி' என்று மாறியது. மழைக்கு அதிபதியான இந்திரன், தான் மழை பொழிவதால் மட்டுமே உலகம் செழிக்கிறது என்ற கர்வத்தில் இருந்தான்.

இந்திரனின் இந்த ஆணவத்தை அடக்க விரும்பிய கிருஷ்ணர், மக்களிடம் "மழை தருவது இந்திரன் அல்ல, இந்த மலைகளும் காடுகளுமே" என்று கூறி, இந்திர வழிபாட்டைத் தடுத்து கோவர்த்தன மலைக்கு பூஜை செய்ய வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த இந்திரன், விடாத பெருமழையைப் பொழியச் செய்தான். மக்களைக் காக்க கிருஷ்ணர் கோவர்த்தன மலையையே தனது ஒற்றை விரலால் குடையாக உயர்த்திப் பிடித்து மக்களைக் காத்தார்.

போகி

தனது தவறை உணர்ந்த இந்திரன், கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கோரினான். அவனை மன்னித்த கிருஷ்ணர், பொங்கலுக்கு முந்தைய நாளை இந்திரனுக்குரிய 'போகி' தினமாகக் கொண்டாட வரம் அளித்தார். போகி தினத்தில் வீட்டைத் தூய்மைப்படுத்துவதுடன் 'நிலைப்பொங்கல்' வைப்பது மிக முக்கியம்.

வீட்டின் கூரை அல்லது வாசலில் வேப்பிலை, ஆவாரம்பூ, பூலாப்பூ (கண்ணுப்பீழை) ஆகியவற்றைச் செருகி வைக்க வேண்டும். இது கிருமிநாசினியாகவும், துர்சக்திகளை விரட்டவும் செய்யப்படுகிறது. வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, மா இலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். குடும்பத் தலைவி தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்ய வேண்டும். மொச்சை, பருப்பு வகைகள், பாயசம், வடை மற்றும் போளி ஆகியவற்றை இறைவனுக்குப் படைக்க வேண்டும்.

சென்னையில் இன்று அதிகாலை பழைய பொருட்களை எரித்ததால் பல இடங்களில் கடும் புகை மூட்டம் காணப்படுகிறது. கிண்டி, போரூர் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாகச் செல்கின்றன. சென்னையில் தற்போது 23°C வெப்பநிலை நிலவுகிறது. பனிப்பொழிவு மற்றும் புகையினால் இன்று காலை 'ஜில்' என்ற உணர்வுடன் கூடிய மூடுபனி நிலவுகிறது.

போகி

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இப்போதும் நிரம்பி வழிகின்றன. மதுரவாயல் மற்றும் தாம்பரம் பகுதிகளில் போக்குவரத்து மெதுவாக நகர்கிறது. பழைய பொருட்களை எரிக்கும்போது பிளாஸ்டிக், ரப்பர் டயர்கள் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை எரிக்க வேண்டாம். இது சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடு சுவாசப் கோளாறுகளையும் உண்டாக்கும். தூய்மையான காற்றோடு தைப்பொங்கலை வரவேற்போம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!