போகிபண்டிகை... டயர், பிளாஸ்டிக் ட்யூப் எரிக்க கூடாது!
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நமது முன்னோர்கள் போகிப்பண்டிகையை இயற்கைப் பொருட்களை எரித்து கொண்டாடி வந்தனர். பழைய பொருட்களை தீயிட்டு புதியதை புகுத்தும் வழியில் காற்று மாசுபடாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி திருவிழா நடைபெற்று இருக்கிறது.

ஆனால் தற்போது, பிளாஸ்டிக், செயற்கை துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம் மற்றும் ரசாயன கலந்த பொருட்களை எரிப்பதால், காற்று மாசு மற்றும் புகை மண்டலம் உருவாகி விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் உருவாகி, விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், நச்சு வாயுக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

இதனைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை கடந்த 21 ஆண்டுகளாக நடத்தி வருகின்றது. 2026-ம் ஆண்டிலும் பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையை கொண்டாட வேண்டும் என கலெக்டர் சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
