புகையில்லா போகி கொண்டாடுங்க… மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை!
சென்னை பட்டினம்பாக்கத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனைக்காக நிறுத்தப்பட்ட டபுள் டெக்கர் பேருந்துகளை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து, புகைப்படம் எடுத்து சென்றனர். இந்நிலையில், போகி பண்டிகையை முன்னிட்டு காற்று மாசுபாடு குறித்த முக்கிய எச்சரிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.

பழைய காலங்களில் இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களையே எரித்து போகி கொண்டாடியதாக வாரியம் நினைவூட்டியுள்ளது. ஆனால் தற்போது பிளாஸ்டிக், ரப்பர், பழைய டயர், டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதனால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற உடல்நல பாதிப்புகளும், வாகன விபத்துகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர்க்க, போகி முன்னரும், போகி நாளிலும் சென்னையில் 15 இடங்களில் 24 மணி நேர காற்று தர கண்காணிப்பு செய்யப்படும். அதன் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு பிளாஸ்டிக், டயர் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாடுமாறு பொதுமக்களிடம் மாசு கட்டுப்பாடு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
