4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள்… உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்த பூடான் வீரர்!

 
bhutan

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை பூடான் இளம் வீரர் சோனம் யெஷே படைத்துள்ளார். மியான்மருக்கு எதிராக கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில், 22 வயதான சுழற்பந்துவீச்சாளர் சோனம் யெஷே 4 ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்தார். இதன் மூலம், ஒரு சர்வதேச டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பூடான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. 128 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மியான்மர் அணி, பூடான் பந்துவீச்சின் முன் முற்றிலும் சரிந்தது. சோனம் யெஷேவின் அபார சுழற்பந்துவீச்சால் மியான்மர் அணி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு ஓவருக்கு சராசரியாக 2 ரன்களுக்கும் குறைவாக ரன்களை விட்டுக்கொடுத்த அவரது பந்துவீச்சு கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

இந்த சாதனை குறித்து பூடான் கிரிக்கெட் தனது எக்ஸ் பக்கத்தில், “காலத்துக்கும் நிலைத்து நிற்கும் அபார பந்துவீச்சு இது. 4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் என்பது நம்ப முடியாத சாதனை” என்று புகழாரம் சூட்டியுள்ளது. இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டு மலேசிய வீரர் சியாஸ்ருல் இட்ருஸ், சீனாவுக்கு எதிராக 7 விக்கெட்டுகள் கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அதை முறியடித்து சோனம் யெஷே புதிய வரலாறு படைத்துள்ளார். பூடான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இந்த சாதனை ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!