’பைசைக்கிள் தீவ்ஸ்’ நடிகர் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!
1948ம் ஆண்டு இயக்குநர் விக்டோரியோ டிசிகா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பைசைக்கிள் தீவ்ஸ். இந்த திரைப்படத்தில் உலகப்போருக்குப் பின்பான வேலையில்லாத் திண்டாட்டம் மக்களை எப்படியெல்லாம் சீரழித்தது என்பதை பேசிய படம். தன் குடும்பத்தினர் பசியைப்போக்க வீட்டிற்குள் இருக்கும் அனைத்தையும் விற்கும் தந்தையும், அவரின் துயரத்தை அருகிலிருந்து பார்க்கும் மகன் என வறுமையின் கொடூரத்தில் இருப்பவர்கள்.
ஒருநாள் நாயகனின் சைக்கிள் திருடப்படுகிறது. அதற்குபின் நடக்கும் கதையை மிக உணர்ப்பூர்வமாக டிசிகா திரைப்படுத்தியிருப்பார். படத்தின் இறுதிக்காட்சியைப் பார்த்து கண்கலங்காதவர்கள் மிகக்குறைவு. உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்ற மகத்தான கிளைமேக்ஸ்களில் ஒன்று என்றே இன்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இப்படத்தில் தந்தையாக நடித்த மெக்சியோரனி, மகனாக நடித்த குழந்தை என்சோ ஸ்டையோலோ இருவருக்கும் இதுவே முதல்படம். இப்படம் வெளியாகி 80 ஆண்டுகள் ஆகவுள்ளது. இருப்பினும், உலகின் தலைசிறந்த 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்ற படம்.
இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான என்சோ, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு நடிப்பைவிட்டு கணித ஆசரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.இந்நிலையில், இத்தாலியில் குடும்பத்துடன் வசித்துவந்த என்சோ உடல்நலக்குறைவால் தன் 85-வது வயதில் காலமானார். அவரது மறைக்கு உலக சினிமா ரசிகர்கள் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
