பிக்பாஸ் 9... விஜே பாரு எலிமினேட்?

 
paaru
 

தமிழ் சீசன் பிக் பாஸ் தொடங்கி நான்கு வாரங்கள் கடந்தும், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுடன் ரசிகர்கள் முழுமையாக ஒன்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பெரிதான புகழ் இல்லாத பிரபலங்கள் என்பதே இதற்கான காரணமாக பேசப்படுகிறது. இந்த மந்தநிலையை உடைக்க, எதிர்பாராத திருப்பமாக வைல்ட் கார்ட் எண்ட்ரி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

90ஸ் கிட்ஸ்களின் பேவரிட் தொகுப்பாளரான பிரஜின், தனது மனைவி சாண்ட்ராவுடன் இணைந்து வீட்டுக்குள் நுழைய இருப்பது நிகழ்ச்சிக்கு புதிய வேகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக கணவன்–மனைவி ஜோடியாக எண்ட்ரி நடைபெறுவதால், ஆரம்பமே இவர்களின் ஆட்டம் அதிரடியாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். ஒருகட்டத்தில் பிரஜினுக்கே டைட்டில் கிடைக்கும் என்ற பேச்சும் வலுவடைய தொடங்கியுள்ளது.

paaru
 

இதற்கிடையில், இன்னொரு அதிர்ச்சி வைல்ட் கார்டாக அமித் பார்கவும் உள்ளே செல்ல இருப்பது பேசுபொருளாகியுள்ளது. விஜய் டிவியில் தொடர்களும் நிகழ்ச்சிகளும் மூலம் பரிச்சயமான அமித், கன்னட பிக் பாஸில் முன்னாள் ‘வாய்ஸ்’ என்பதால், விளையாட்டின் நரம்பு பிடித்தவர் என சொல்லப்படுகிறது. போட்டியாளர் பார்வதியுடன் மோதல் ஏற்படலாம் என அவர் முன்பே கூறியிருப்பது எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஏற்கவே சண்டைகள் நிறைந்துள்ள வீட்டுக்குள், இந்த வைல்ட் கார்டுகள் நுழைய இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் பெரிய பிரளயம் வெடிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!