நண்பேண்டா... பிக் பாஸ் மேடையில் நெகிழ வைத்த விஜய் சேதுபதி – ப்ரஜின் நட்பு!

 
பிரஜின்
 

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி – ப்ரஜின் இடையேயான நட்பு காட்சிகள் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளன. பாதியிலேயே வெளியேறிய ப்ரஜின் சோகத்தில் இருந்த போதும், மேடையில் விஜய் சேதுபதியை மரியாதையாக ‘சார்’ என்று அழைத்தார். இதைக் கவனித்த விஜய் சேதுபதி, உரிமையுடன் ‘மச்சி’ என அழைத்து, ப்ரஜினின் ஆட்டத்தை மனதார பாராட்டி, உற்சாக வார்த்தைகளுடன் அவரை அனுப்பி வைத்தார். கடைசி இரண்டு வாரங்களில் ப்ரஜினின் ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும், குறுகிய காலத்திலேயே குறைகளை சரிசெய்து விளையாட்டை புரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

இதனால் நம்பிக்கை பெற்ற ப்ரஜின், சக போட்டியாளர்களிடமும் தனது மனைவி சான்ட்ராவிடமும் மனநிறைவுடன் பேசினார். ப்ரஜின் வெளியேறியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சான்ட்ரா அழுதுக்கொண்டிருந்த நிலையில், அவரை சமாதானப்படுத்தவும் விஜய் சேதுபதி நண்பனாகவே உரையாடினார். அந்த நேரத்தில் ப்ரஜினை கட்டியணைத்து முத்தமிட்ட காட்சி அனைவரின் கவனத்தையும் பெற்றது. அது மனைவிக்கானது என ப்ரஜின் கூற, உடனே விஜய் சேதுபதி ‘இது என் நண்பனுக்கானது’ என்று சொல்லி மேடையை சிரிப்பில் மூழ்கடித்தார்.

சின்ன திரையில் இருவரும் ஒன்றாக நடிகர்களாகப் பயணத்தை தொடங்கியவர்கள். ஒரு காலத்தில் ப்ரஜின் நட்சத்திரமாக உயர்ந்தபோது, விஜய் சேதுபதியும் அவருடன் தொடர்களில் நடித்துள்ளார். பின்னர் விஜய் சேதுபதி சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தாலும், இவர்களுடைய நட்பு மாறாததே ரசிகர்களை இன்றும் கவர்கிறது. பிக் பாஸ் மேடையில் அது மீண்டும் வெளிப்பட்டதை பார்த்த ரசிகர்கள், “நட்பு என்றால் இப்படித்தான்” என்று சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!