பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்... விக்கல்ஸ் விக்ரம் திடீர் முடிவு… ரசிகர்கள் அதிர்ச்சி!

 
பிக்பாஸ்9

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 13-வது வாரத்தை எட்டியுள்ளது. குறைந்த வாக்குகள் காரணமாக கடந்த வாரம் சுபிக்‌ஷா வெளியேற்றப்பட்டார். இதற்கு முன், ரெட் கார்டு மூலம் விஜே பார்வதி மற்றும் நடிகர் கமருதீன் வெளியேற்றப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வியன்னா

இந்த நிலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வியானாவுக்கு ஒரு சிறப்பு டாஸ்க் வழங்கப்பட்டது. ஒருநாள் முடிவில் ஒருவரை தன்னுடன் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அந்த டாஸ்க். இதையடுத்து, வீட்டில் நடந்த சில ரகசிய விஷயங்களை வியானா வெளிப்படையாக பேசியதால், போட்டியாளர்களிடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த விக்கல்ஸ் விக்ரம், இனியும் ஒருவரை குறை கூறி விளையாட முடியாது என்று தெரிவித்தார். திவ்யாவை அழ வைத்ததற்கு மன்னிப்பு கேட்ட அவர், தானாக முன்வந்து போட்டியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். வியானாவுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்வது மகிழ்ச்சிதான் என்றும் விக்ரம் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!