பிக் பாஸ் வெளியேற்றத்திற்கு பிறகு 24 மணி நேரம் தனிமை கொடுமை… கனி திரு கதறல்!

 
பிக்பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு நிர்வாகத்தினர் தன்னை 24 மணி நேரம் தனிமையில் வைத்திருந்ததாகவும், அந்த நேரம் மிகவும் கொடுமையாகக் கழிந்ததாகவும் கனி திரு உருக்கமாக தெரிவித்துள்ளார். குறைந்த வாக்குகள் மூலம் மக்கள் ஏன் தன்னை வெளியேற்றினார்கள் என்ற கேள்வி மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருந்ததாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்ததாகவும் கூறியுள்ளார். மனிதர்களை மிகவும் நேசிப்பவன் நான். ஆனால், அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்ற உண்மை வலியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 தற்போது 13-வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் அமித் பார்கவ் மற்றும் கனி திரு ஆகியோர் குறைந்த வாக்குகள் காரணமாக வெளியேற்றப்பட்டனர். வீட்டிற்கு திரும்பிய கனி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோவில், மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். தனிமை முடிந்து குடும்பத்தினர், சகோதரி விஜயலட்சுமி, கணவர் திரு, குழந்தைகள் ஆகியோரை சந்தித்த பிறகே இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்ததாகவும் அவர் பகிர்ந்தார்.

ரசிகர்களின் அன்புக்கு வார்த்தைகளே இல்லை என்றும், அவர்களது வீடியோக்களை பார்த்தபோது மனம் நெகிழ்ந்ததாகவும் கனி திரு தெரிவித்தார். நான் வணங்கிய தெய்வங்கள் என்னை கைவிடவில்லை என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார். இதற்கிடையே, விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் சான்ட்ராவை வைத்துக்கொண்டு கனி திருவை வெளியேற்றிவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அரசியல் நிறைந்த முடிவு இது என்றும், கனி என்றுமே ரசிகர்களின் மனதில் ராணியாக இருப்பார் என்றும் கருத்துகள் குவிந்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!