#BIG BREAKING: நடிகர் ஜெயராமைக் கைது செய்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு?! ... சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கில் திடீர் திருப்பம்!

 
ஜெயராம்

நடிகர் ஜெயராம் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது கேரள திரைப்பட ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரள திரையுலகில், நடிகர் திலீப் துவங்கி, அம்மா சங்க  பெண் உறுப்பினர்கள், பாலியல் அத்துமீறல் சர்ச்சைகளைக் கிளப்பியது பூகம்பத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது நடிகர் ஜெயராம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் ஜெயராம் அவர்களின் வீட்டிற்கு இந்தச் சிலைகளை எடுத்துச் சென்று பூஜை நடத்திய குற்றத்திற்காக, அவரைக் கைது செய்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில், துவார பாலகர் சிலைகள் மற்றும் கோவில் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் வெளியாகி, கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சபரிமலை

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கத் தகடுகளைச் சட்டவிரோதமாகச் சென்னைக்குக் கொண்டு சென்ற வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போற்றி, மற்றும் தங்கத் தகடுகள் எனத் தெரிந்தும், அவற்றை 'தாமிரத் தகடுகள்' என்று சான்றிதழ் வழங்கிய முன்னாள் தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி முராரி பாபு, இவர்களுடன் சேர்த்து வேறு 3 பேர் என மொத்தம் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் தேவசம்போர்டு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மகுமார் கடந்த நவம்பர் 20ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது இவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜெயராம்

இந்த வழக்கில், முன்னாள் தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கேரளாவில் அடுத்த மாதம் (டிசம்பர்) உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் முடிந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் மந்திரி சுரேந்திரனிடம் விசாரணை நடத்துவதற்கு முன்னதாக, சபரிமலை கோவில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கோவில் கதவு நிலைகளைத் திருட்டு நடைபெற்ற காலத்தில் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜை நடத்த ஏற்பாடு செய்த மலையாள நடிகர் ஜெயராமை கைது செய்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்தத் தங்கம் அபகரிப்பு விவகாரத்தின் உண்மையை வெளிக்கொண்டு வரவும், இந்தச் சதித் திட்டத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியவும் விசாரணை அதிகாரிகள் முயன்று வருகின்றனர். கோவிலின் மூத்த தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு மோகனரு ஆகியோர் ஏற்கனவே சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!