அதிர்ச்சி.. இந்தியாவுக்கும் ஆபத்து! சிரியா நிலநடுக்கத்தை கணித்த ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை!

 
ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ்


பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அடுதடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 15000ஐ தாண்டியுள்ள நிலையில் சுமார் 20000 வரை பலி எண்ணிக்கை உயரக்கூடும் என சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகள் பலவும் துருக்கி ஆதரவு கரம் நீட்டியுள்ளன. மீட்பு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. துருக்கி, சிரியா, லெபனான்  நாடுகளில் நிலநடுக்கம் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் அதனை கணித்து தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ்

அவர் தற்போது  இந்தியாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட இருக்கும் நிலநடுக்கத்தை  3 நாட்கள் அதாவது பிப்ரவரி 3ம் தேதியே தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கணிப்பின் படி சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் எல்லையோர நகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இடிபாடுகள், மீட்பு பணிகள் மூலம் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இடிபாடுகளில் தப்பியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட  ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பிராங்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்  ஆப்கானிஸ்தானில் இருந்து நிலநடுக்கம் தொடங்கி இந்தியா வழியாக சென்று இந்தியப் பெருங்கடலில் முடியும் எனக் கூறியுள்ளார். 

ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ்

இருப்பினும், இந்தியாவை பொறுத்தவரை  இப்பகுதியில் நிலப்பரப்பு கரடுமுரடாக உள்ளது.  இந்த கணிப்புகள் தோராயமானவை. அனைத்து நிலநடுக்கங்களும் பெரிய சேதத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து உறுதியாக சொல்லிவிட முடியாது. இயற்கை ஒருபோதும் தன்னை முன்கூட்டியே அறிவித்து கொள்வது இல்லை எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, அஸ்ஸாம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் பீகார் மாநிலங்களில்  மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இம்மாநில மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web