பெரும் பரபரப்பு.. பாஜக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தர்ணா !!

 
கீதா

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சி 10 ஆவது வார்டு உறுப்பினராக கீதா என்பவர் உள்ளார். இவா் கணவா் வினோத் காமராஜ் மற்றும் 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்று, அலுவலக வாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் பரபரப்பு நிலவியது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கீதாவிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது தனது சொந்த கட்சியினர் மீதே பல்வேறு புகார்களை அடுக்குகிறார்.

கீதா

போலீசாரிடம் விசாரணையின்போது கீதா கூறியதாவது, பாஜகவைச் சோ்ந்த சிலா் எனது கணவா் மீது இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனா். மேலும் எனக்கும், எனது கணவா், குழந்தைகளுக்கும் சிலா் தொடா்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனா். சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்

கீதா

இதைத் தொடா்ந்து அவரிடம் போலீசார் பேச்சுவார்தத்தையில் ஈடுபட்டனர். உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து அவா்கள் தா்னாவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனையடுத்து கீதா தனது குடும்பத்தினருடன் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web