பெரும் பரபரப்பு.. பாராகிளைடிங் செய்து 50 அடி உயர மின்கம்பத்தில் சிக்கிய பவித்ரா- பகீர் வீடியோ!

கோவையை சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண் தனது பயிற்சியாளர் சந்தீப் என்பவருடன் சேர்ந்து திருவணந்தபுரத்தை அடுத்த வர்க்கலா கடற்கரை பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காற்றின் திசை மாறி அவர்களை வேறு இடத்துக்கு தள்ளிச்சென்றது.
அப்போது கடற்கரையில் இருந்து சிறிது தூரம் தள்ளி புதிதாக அமைக்கப்பட்டு வரும், பணி முடியாத நிலையில் இருந்த 50 அடி உயர மின்கம்பத்தில் பாராகிளைடிங் சிக்கியது. இதனால் பவித்ரா மற்றும் பயிற்சியாளர் சந்தீப் ஆகியோர் மின்கம்பத்தில் சிக்கி தவித்தனர்.
இளம்பெண்ணும் பயிற்சியாளரும் மின்கம்பத்தில் சிக்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மின்கம்பத்தின் கீழ் வலைகளை விரித்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் பயன்படுத்தும் பாராகிளைடர் மோட்டார் வகையை சார்ந்ததல்ல கைகளால் இயக்கும் வகையை சார்ந்தது. காற்றின் திசை திடீரென மாறுபட்டதால் நாங்கள் மின் கம்பத்தில் சிக்கிக்கொண்டோம் எனக் கூறினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ன்கம்பத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க ஏற்பாடுகளை செய்தனர். இதனிடையே தீயணைப்புத்துறையினர் மேலே ஏறி கயிறுகட்டி பவித்ரா மற்றும் பயிற்சியாளரை பத்திரமாக மீட்டனர். சிறிது தூரத்தில் இருந்து இருவரும் அந்த வலையில் விழுந்து சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். பவித்ரா , அவரது பயிற்சியாளரும் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க