7.2 அடி உயர இளைஞர் .... இந்தியாவின் பிக் மேன்... வைரல் வீடியோ!
மதுரா ரயில் நிலையத்தில் 7.2 அடி உயரமுள்ள நபர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இமாம்ஷு சின்ஹா என்ற இந்த இளைஞர், தனது அபாரமான உயரத்தால் பிளாட்பாரத்தில் இருந்த பயணிகளை வியப்பில் ஆழ்த்தினார். ரயிலில் இருந்து இறங்கியவுடன் அனைவரின் கவனமும் அவர்மீதே திரும்பியது.
‘தி பிக்மேன்’ என்று அழைக்கப்படும் இமாம்ஷு, நடந்து செல்லும் போது பலர் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தனர். சிலர் அவரை பின்தொடர்ந்து சென்று பார்த்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோவை இமாம்ஷு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. 7 அடிக்கும் மேல் உயரமுள்ள ஒருவரைப் பார்ப்பது அதிசயம் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரை இந்தியாவின் மிக உயரமான உள்ளடக்க உருவாக்குநர் என்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
