பிக் நியூஸ்... 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவருக்கும் 5 மதிப்பெண்கள் போனஸ் அறிவிப்பு!

 
பள்ளி கல்லூரி விடுமுறை school holiday

இந்த வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான நியூஸ். ஆங்கிலத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 5 மதிப்பெண்கள் போனஸ் மதிப்பெண்களாக வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதில் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை அனுப்பாதபட்சத்தில் அந்தந்த பள்ளிகள் விடைதாள்கள் திருத்தப்படாது என தேர்வு துறை கடும் எச்சரிக்கை பிறப்பித்தது. 

தேர்வு
அந்த வகையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல்  6ம் தேதி தொடங்கி 20ம் தேதி அன்று நிறைவு பெற்றது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்படும் என  தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆங்கிலப் பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் என மொத்தமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன்படி  ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி

இந்த கேள்விகளுக்கான பதில்களை விடைத்தாளில்  எழுத முயற்சித்திருக்க வேண்டும் என்பது கூடுதல் தகவல். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஏப்ரல் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 60000க்கும்  மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட மற்ற  பணிகள் நிறைவடைந்து  ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்படும் என  கல்வித் துறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web