பெரும் அதிர்ச்சி... தமிழகத்தில் 50,674 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியாய் 50,674 பேர் நேற்று நடைப்பெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு, முதல் தேர்வான தமிழ் மொழித் தேர்வை எழுதவில்லை. நேற்றைய தேர்வில் கலந்து கொள்ளாத நிலையில், இந்த வருடம் இந்த மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற இயலாது. இந்த தகவலைப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வளரும் தலைமுறையினர் அதிகளவில் மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர். இது குறித்து அரசோ.. .பள்ளி ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அக்கறை கொள்வதில்லை. அடுத்த தலைமுறையினர்க்கு வழிக்காட்ட நாம் தவறிவிட்டோம் என்பது நிஜமாகி கொண்டு வருகிறது. அவர்களது வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிட வேண்டிய அரசு நினைவு சின்னங்கள் அமைப்பதில் அக்கறை காட்டுகிறது. வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது கடமையில் இருந்து தவறுகிறார்கள். பொதுத்தேர்வைக் காரணம் காட்டி பயமுறுத்தி பாலியல் சீண்டல்களும் பல இடங்களில் நடந்து வருகிறது. பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதிலும், சீரியல்களிலும் மூழ்கி கிடக்கிறார்கள். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ - மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத இருக்கின்றனர். 

Exam

சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ - மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வான தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 50,674 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

DPI

பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ, மாணவிகளில் 49,559 பேர் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வை தனித்தேர்வர்கள் 1,115 பேரும் எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web