அதிர்ச்சி.. அடுத்தடுத்து 10,000 பெண்களின் குளியல் வீடியோக்கள்! வசமாக சிக்கிய டாக்டர்!

 
வெப்ப  நீரூற்றுகள்

ஜப்பானின் முக்கிய நகரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயற்கையின் அழகிய சூழலுடன் வெப்ப  நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெப்ப நிரூற்றுகளில் குளிக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் ஆர்வமாக இருக்கும். அந்நாட்டினரும் இதனை பெரிதும் விரும்புவர். 

அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வெப்ப நீருற்றிற்கு சென்று ஜாலியாக இருந்து வருவர். கடந்த 2 ஆண்டாக கொரோனா ஊரடங்கு காரணமாக வெப்ப நீருற்று மையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் அவை செயல்படத் தொடங்கி உள்ளன. 

வெப்ப  நீரூற்று

இந்நிலையில் வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை ரகசிய கேமராவை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்து ஒரு கும்பல் பணம் சம்பாதித்த நிகழ்வு ஜப்பானில் பெரும் புயலை கிளம்பியுள்ளது. அதாவது, குளிக்கும் பெண்களை ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் சிலர் எடுப்பதாக ஷிசுவோகா மாகாண போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து பெண்கள் குளிக்கும் படங்களை எடுத்த விவகாரத்தில் விசாரணை நடத்தி 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ஜப்பானின் ‘அசாஹி ஷிம்பன்’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட வெந்நீர் நீருற்றுகளில் குளித்த பெண்களில் 10,000 பேரின் ஆபாச புகைப்படங்கள், வீடியோவை எடுத்து சிலர் விற்றுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக டாக்டர் ஒருவர் உட்பட 17 பேரை கைது செய்துள்ளோம். 

வெப்ப  நீரூற்று

இவர்களில் கரின் சைட்டோ (50) என்பவர் தனது 20 வயதிலிருந்தே வெந்நீர் ஊற்றுகளுக்கு வரும் பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட மற்ற ஆண்கள், கரின் சைட்டோவிடமிருந்து பெண்களைப் படம்பிடிக்கும் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டது தெரியவந்தது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web