நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த போலீசார்... வைரலாகும் வீடியோ!

 
இளம்பெண்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கார், பைக்குகளில் சென்று கண்காணித்து வருகின்றனர். ஆனால், அங்கு இரவு நேரத்தில் சாலையோரம் சென்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபாலில் உள்ள ஹனுமங்கஞ்ச் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட அல்பனா டாக்கீஸ் தியேட்டர் அருகே, இரவில் தனியாக நின்ற பெண்ணிடம் அந்த காவலர் பாலியல் சிலுமிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பைக்கில் செல்லும் அந்த காவலர் நள்ளிரவில் இளம்பெண்ணை பிடித்து அங்கங்களை தொட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. 


அந்த நிகழ்வினை தூரத்தில் இருந்தவாறு ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பைக்கில் அமர்ந்தபடி இருக்கும் காவலர் ஒரு இளம்பெண்ணின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்.

அப்பெண் காவலரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து வேகமாக நடந்து செல்வதும் காவலர் மீண்டும் அந்த பெண்ணை பைக்கில் துரத்த முயல்வதும் பதிவாகியுள்ளது. உலக மகளிர் தினத்தன்று நடந்ததாக வெளியாகியுள்ள இந்த வீடியோவை பார்க்கும் அனைவரையும் பேரதிர்ச்சியைடைய செய்துள்ளது.

police

இச்சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணைய உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான சங்கீதா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில், பாதுகாவலர்களே வேட்டையாடுபவர்களாக மாறியுள்ளனர். இரவில் தனியாக நின்ற பெண்ணிடம் காவலர் ஒருவர் சில்மிஷம் செய்ததைப் பார்த்த காவல்துறையின் மனிதாபிமானமற்ற முகம் அம்பலமாகியுள்ளது. ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்தின் கீழ் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது உண்மையிலேயே வெட்கக்கேடானது, என சங்கீதா சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்புடைய காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web