பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றங்கள் அவசியம்... நந்தினி பளிச்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில் வாழ்கையும் பாதித்துள்ளதாக நடிகை நந்தினி தெரிவித்துள்ளார். “நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு காட்சி ஆகவே இருக்க வேண்டும். ஆனால், அதை பார்ப்பதால் மக்கள் மன அமைதியை இழக்கிறார்கள் என்றால் அது சரியில்லை. எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிப்படையிலான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

நந்தினி, நிகழ்ச்சியில் தனக்கு நேர்ந்தது முறையாக இல்லையெனவும், சில போட்டியாளர்களை வெளியேற்றாமல் விட்டு தன்னை மட்டும் பைத்தியக்காரி என்று சொல்லி வெளியேற்றியதை குறை கூறினார். “சான்ட்ரா, விஜே பார்வதி, கமருதீன் ஆகியோர் மீதும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது; ஆனால் அவர்களைப் பாதுகாத்தனர். எனக்கு மட்டும் தவறான முறையில் நடவடிக்கை எடுத்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நந்தினி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணம் மற்றும் புகழுக்காக மட்டும் ஒப்பந்தம் செய்ததாகவும், நிகழ்ச்சியில் ஏற்பட்ட மனரீதியான தாக்கம் காரணமாக எந்த வேலைக்கும் செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். “நான்கு நாட்கள் மட்டுமே இருந்தாலும், நிகழ்ச்சியில் நடந்ததை மறைக்க முடியாது. தனிமனித ஒழுக்கத்தை விட்டுக்கொடுத்து விளையாட முடியாது” என்று அவர் முடிவில் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
