பணப்பெட்டியை தூக்கி சென்ற பிக்பாஸ் போட்டியாளர்... ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ் 9வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், யார் வெற்றியாளர் என்ற கணிப்பே முடியாத சூழல் நிலவுகிறது. வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பார்வதி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், தற்போது அதைவிட பெரிய ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது.

டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கை தொடர்ந்து, இறுதிச்சுற்றில் கானா வினோத், சபரி, திவ்யா கணேஷ், சாண்ட்ரா, அரோரா, விக்ரமன் என ஆறு பேர் மட்டுமே இருந்தனர். இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்ட நிலையில், அதில் போட்டியாளர் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பணப்பெட்டியில் ரூ.12 லட்சத்திற்கும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சீசனில் கானா வினோத் தான் டைட்டில் வெல்வார் என ரசிகர்கள் நம்பிய நிலையில், அவரது வெளியேற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பிக்பாஸ் 9 டைட்டிலை திவ்யா கணேஷ் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
