பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக குடும்பத்தினருடன் 24 மணி நேரம்!
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியில் புதிய மாற்றத்தை பிக் பாஸ் அறிவித்துள்ளார். இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வார முடிவில் ரம்யா ஜோ, வியானா ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டனர். இந்த வார கேப்டனாக கானா பாடகர் வினோத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு நேரம் கணிக்கும் வித்தியாசமான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் கூறும் நேரத்தை துல்லியமாக கணித்து மணி அடிக்க வேண்டும். தொடர்ந்து நடன மேடையில் நடனம் ஆட வேண்டும். மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், வெற்றி பெறும் அணிக்கு அடுத்த வார கேப்டன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

இதோடு, பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக புதிய சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் வெல்லும் அணியில் சிறப்பாக செயல்படும் ஒருவரின் குடும்பத்தினர், 24 மணி நேரம் பிக் பாஸ் வீட்டில் தங்க அனுமதி பெறுவார்கள். வழக்கமாக 30 நிமிடங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு போட்டியாளர்களை ஆச்சரியத்திலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்த வார போட்டியில் வெல்ல அனைவரும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
