பிக் பாஸ் போட்டியாளர்கள் மோசம்… வெளியேறிய திவாகரின் சர்ச்சைக் குறிப்பு!

 
திவாகர்
 

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் இதுவரை வந்த சீசன்களைவிட மிகவும் மோசமானவர்கள் என வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் அதிரடி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 42 நாட்கள் வீட்டில் தங்கியிருந்த அவர், கடந்த வாரம் குறைந்த வாக்குகள் காரணமாக வெளியேற்றப்பட்டார். வெளியேறிய உடனே அளித்த பேட்டியில், “இந்த சீசனில் போட்டியாளர்கள் தனிப்பட்ட முறையிலும், போட்டி மனப்பான்மையிலும் முற்றிலும் பலவீனமானவர்கள். யாருக்கும் நேர்மை இல்லை” என்று கூறியது ரசிகர்கள் இடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

திவாகர்

பிக் பாஸ் வீட்டிலிருந்தபோது பல சர்ச்சைகளில் சிக்கிய திவாகர், “முந்தைய சீசன்களில் ஆரி, அர்ச்சனா போன்றவர்கள் தனித்தன்மையுடன் தங்கள் கருத்துகளை வலுப்படுத்தினர். ஆனால் இந்த முறை அனைவரும் குழுக்களாக இணைந்து நாடகம் ஆடுகிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக பிரவீன்ராஜை குறித்து, “அவர் போட்டியில் நல்லவர் தான்… ஆனால் தனிப்பட்ட முறையில் சரியான மனிதர் இல்லை. மக்கள் இதற்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்ற கூற்று புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

திவாகர்

வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களின் நிலையைப் பற்றி பேசும்போது, “அவர்கள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான நாடகத்தில் இருக்கிறார்கள். அதனால் டாப் 5 யார் என்பதையே சொல்ல முடியாது” என திவாகர் குறிப்பிட்டுள்ளார். வெளியேறிய பிறகே இப்படிப் பேசுவது சரியாக இல்லை என்று சிலர் விமர்சித்து வரும் நிலையில், திவாகரின் கருத்துகள் பிக் பாஸ் ரசிகர் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!