பிக்பாஸ் விக்ரமன் சர்ச்சை வீடியோ!

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு 2 ம் இடத்தை பிடித்தவர் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய உறுப்பினரான இவர், சமூக சேவைகளிலும் அரசியலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பிக்பாஸில் இவர் கூறிய “அறம் வெல்லும்” எனும் வாசகம் பயங்கர வைரலானது. இவர் டைட்டிலை வெல்லாதது பலருக்கு வருத்தமே. இருந்தாலும் பிக்பாஸை தாண்டியும் தனிப்பட்ட வாழ்விலும் இவருக்கு நிறைய ஆதரவுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
— Vikraman R (@RVikraman) March 9, 2025
அறத்தின்படி செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்த பாலிமர் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி.
பிக் பாஸ் முடிந்தபிறகு விக்ரமன் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து புகார் கூறியுள்ளார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட புகார் தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. இந்த பிரச்சனை சுமூகமாவதற்குள், இப்போது இன்னொரு சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். பெண் வேடமிட்டு அவர் ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் பெண் உடையில் அவர் சாலையில் ஓடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
விக்ரமன் இந்த சர்ச்சை வீடியோ குறித்து சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த வீடியோவை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.
அதனால் இது சினிமா ஷூட்டிங் வீடியோ தான் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அதற்குள் அந்த வீடியோ வைரலாகிவிட்டது. அதோடு முதலில் அந்த வீடியோவை வைத்து செய்தி வெளியிட்ட சேனல் ஒன்று அதை நீக்கியும் விட்டது. தற்போது விக்ரமனின் மனைவி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் கேமராவே இல்லை ஆனால் ஷூட்டிங் என சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, ஷீட் செல்லும் முன் டெஸ்டுக்காக எடுக்கப்பட்ட வீடியோ அது என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் வேண்டுமென்றே யாரோ அவதூறு பரப்ப வேண்டும் என அந்த குறிப்பிட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் விக்ரமன் மனைவி தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநர் ராஜு முருகனும் அவரது மனைவி ஹேமா சின்ஹாவும், விக்ரமன் தங்கியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசித்து வருகின்றனர். தாங்கள் வசிக்கும் பகுதியில் பாலியல் ரீதியான பல குற்றச்சம்பவங்கள் நடைப்பெற்று வருவதாகவும் இது குறித்து குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். குடியிருப்புசங்க நிர்வாகிகள் தொடர்ந்து பராமரிப்பு தொகை கேட்டு டார்ச்சர் செய்து வருவதாகவும், குப்பைகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!