டிசம்பர் 1ம் தேதி பீகார் சட்டப்பேரவை கூடுகிறது!

 
பீகார்
 

பீகார் சட்டசபையின் தேர்தல் முடிவில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றிய நிலையில், நிதிஷ் குமார் கடந்த 20ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 1ம் தேதி தொடங்க உள்ளது.

5 நாட்கள் நடக்க உள்ள இந்த கூட்டத்தில், புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலும் நடைபெறும் என சட்டசபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இக்கூட்டத்தொடரில் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான நாராயணன் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவுகிறது. புதிய அதிமுக–பாஜக கூட்டணியின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால், பீகார் அரசியல் சூழலை இது தீர்மானிக்கும் அமர்வாக கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!