பீகார் தம்பதி, குழந்தை உடல்கள் சொந்த மாநிலத்துக்கு கொண்டு செல்ல முதல்வர் உத்தரவு!

 
bihar
 

பீகார் மாநிலத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த தம்பதி மற்றும் அவர்களின் 2 வயது குழந்தை சமீபத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கவுரவ்குமார், அவரது மனைவி புனிதாகுமாரி மற்றும் குழந்தை ஆகியோர் வடமாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை சென்னை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆம்புலன்ஸ்

கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களை சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்ல உதவி தேவைப்படுவதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். குடும்பத்தினரின் வேதனையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

போலீஸ்

அதன்படி, தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் எந்தவித கட்டணமுமின்றி உடல்களை பீகாருக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பான தகவலை அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!