பீகாரில் இனி திறந்தவெளி இறைச்சி விற்பனைக்குத் தடை - மீறினால் ரூ.5,000 அபராதம்!

 
கறி இறைச்சி அசைவம் தீபாவளி

உத்தரப் பிரதேசத்தைப் பின்பற்றி தற்போது பீகார் மாநிலத்திலும் திறந்தவெளியில் இறைச்சி விற்பனை செய்ய அம்மாநில அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. பொதுச் சுகாதாரம் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இனி உரிய உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இறைச்சிக் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு நேரடியாகத் தெரியக்கூடாது. கடைகளைத் திரைகள் அல்லது கருப்பு நிறக் கண்ணாடிகளால் மறைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடைபாதைகள், சாலை ஓரங்கள் மற்றும் திறந்தவெளியில் இறைச்சியைத் தொங்கவிட்டு விற்பனை செய்வதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறிச் செயல்படும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி மட்டன் சிக்கன்

பொது இடங்களில் இறைச்சி வெட்டப்படுவதாலும், திறந்தவெளியில் விற்கப்படுவதாலும் சுகாதாரக் கேடு விளைவதாகவும், பாதசாரிகளுக்கு அசெளகரியம் ஏற்படுவதாகவும் வந்த புகார்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தர்பங்கா போன்ற பகுதிகளில் ஏற்கனவே இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

ரம்ஜான் பண்டிகை நெருங்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், சிறு வணிகர்கள் தங்களின் உரிமங்களை விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள சட்டவிரோதக் கடைகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பீகார் முழுவதும் உள்ள இறைச்சி விற்பனையாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டத்தைப் பின்பற்றுவோருக்குப் பாதிப்பு இருக்காது என அரசு உறுதி அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!