நெல்லையில் கஞ்சா விற்ற பீகார் மாநில வாலிபர் கைது...300 கிராம் போதைப்பொருள் பறிமுதல்!

 
கஞ்சா கடத்தல்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில், சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கூடங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் நிஜல்சன் தலைமையிலான போலீஸார் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

அப்போது, அங்குள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரைப் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான ஆதர்ஸ்குமார் என்பதும், தற்போது பிழைப்பிற்காகக் கூடங்குளம் பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரைத் தீவிரமாகச் சோதனை செய்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சா

அவரிடமிருந்து சுமார் 300 கிராம் எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரை உடனடியாகக் கைது செய்தனர். வெளிமாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்குக் கஞ்சாவை வாங்கி வந்து, இங்குள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு அவர் விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எங்கிருந்து இந்த கஞ்சா கொண்டு வரப்பட்டது? என்பது குறித்துக் கூடங்குளம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் குண்டர் சட்டம் பாயும் என நெல்லை மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!