சென்னையில் 2வயது குழந்தை உட்பட தொழிலாளர் குடும்பம் கொலை ... 3 வது நாளில் சடலம் மீட்பு!

 
பீஹார்
 

சென்னை தரமணி பகுதியில், பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கௌரவ்குமார் (24), அவரது மனைவி முனிதா குமாரி (21), 2 வயது மகன் பிர்மணி குமார்   ஆகியோர் கடந்த 25-ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். கௌரவ்குமார் குடும்பத்திற்கு சென்னையில்  அடைக்கலம் அளித்தவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்கள் விசாரணையில், கௌரவ்குமார் மற்றும் பிர்மணி குமாரின் சடலங்கள் அவ்வளவு இடங்களில் மீட்கப்பட்டாலும், முனிதா குமாரியின் சடலம் குப்பைத் தொட்டியில் வீசியதாக தெரிவித்தனர். இதனால், கடந்த இரண்டு நாட்களாக (புதன், வியாழன்) சடலத்தை தேடும் பணிகள் நடைபெற்றன.

போலீஸ்

மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (ஜனவரி 30), பெருங்குடி குப்பைக் கிடங்கில் முனிதா குமாரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல் துறையினர் மேலும் 2 பேரை விசாரணைக்காக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!