பைக் மோதி விபத்து... இளைஞர் மரணம்!

 
விபத்து
 


தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த ஒடிசா வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

ஆம்புலன்ஸ்

ஒடிசா மாநிலம் சுந்தர்கார்த், கெர்டகானி, உத்ஷபா ஜோகி மகன்  ஹேமகாந்த ஜோகி (28). இவர் கல்லாமொழியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது, சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்செந்தூரில் இருந்து குலசை நோக்கி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. 

போலீஸ்

இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது