பைக் - பள்ளி வாகனம் மோதி விபத்து... தலைமை ஆசிரியர் பலி!

 
போலீஸ்
 


தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே  பள்ளி வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, முத்து நகரைச் சேர்ந்தவர் அருள் அய்யா மகன் ஐசக் தேவராஜ் (56), இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே கே.கைலாசபுரத்தில் உள்ள டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணிபுரிந்து வருகிறார். 

போலீஸ்

இந்நிலையில் நேற்று காலையில் கோவில்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வில்லிசேரி அருகே வரும்போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை கோவில்பட்டி  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

குழந்தை  பலி

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி வழக்கு பதிவு செய்து, பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த சீனியப்பன் மகன் மாரியப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது