பள்ளத்தில் பைக் கவிழ்ந்து 2 இளைஞர்கள் துடிதுடித்து பரிதாப பலி!

 
சதீஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் முனிராஜ் மகன் 32 வயது வெங்கடேஷ்.  லோகேஷ் மகன் திலிப் . இருவரும் கூலி தொழில் செய்து வந்தனர். இருவரும் நேற்றிரவு பைக்கில் செல்லோபுரம் ஏரி அருகே சென்றனர்.

ஆம்புலன்ஸ்

அப்போது, திடீரென பைக்   கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை பள்ளத்தில்  கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ், திலிப்  2 பேருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று  காலை வரை இருவரும் வீட்டிற்கு வராததால், அவர்களது உறவினர்கள் தேடினர். அப்போது செல்லோபுரம் ஏரிக்கரையில் பைக் கவிழ்ந்து 2 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

போலீஸ்

இதனை அறிந்த வெங்கடேஷ், திலிப்  உறவினர்கள், குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலின் பேரில்  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும்  மீட்டு, பிரேத பரிசோதனைக்கு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web