தொடரும் சோகம்!! வீடியோ எடுத்தபடியே பைக் ரைடு!! 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி !!

 
வீடியோ

மனிதர்களின் கையில் ஆறாம் விரலாய் மாறிவிட்ட மொபைல் போன்களால் நாளுக்கு நாள் விபரீதங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சார்ஜ் போடும் போது வெடித்த போன், குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது வெடித்த போன், சட்டைப்பையில் வைத்திருக்கும் போது திடீரென தீப்பற்றிய செல்போன் என தொடர்கதையாகி வருகிறது. தொழில்நுட்ப கோளாறா, அல்லது தயாரிப்பில் குறைபாடு என ஆய்வுகள் நடைபெற்று வந்த போதிலும் அதற்குள் தொடர்ச்சியாக உயிர்ப்பலி அதிகரித்து கொண்டே செல்கிறது. இது ஒரு பக்கம் இருக்க தினமும் வீடியோ எடுத்து பதிவிட்டு சமூக வலைதளங்களில் லைக்குகளை வாங்கவும், ஷேர்களை குவிக்கவும் இளைய சமுதாயம் உயிரை பணயம் வைத்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் எப்போதம் பரபரப்பாக வாகனங்கள் சென்றுக்கொண்டே இருக்கும் இந்த நிலையில், அதேபகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் ஒரே பைக்கில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி வேகமாக சென்றுள்ளனர். ஒருகட்டத்தில் முன் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.

வீடியோ

தொடர்ந்து வளைவில் அவர்கள் முந்தியபோது, விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், பைக்கில் சென்ற 3 பேரும் சிதறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக பைக் சென்றதால் அடித்துசெல்லப்பட்டு படுகாயம் அடைந்து மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மூவரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தயாளன் (19), சார்லஸ் (21), ஜான் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோ

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web