பறவைகள் கணக்கெடுப்பு... புகைப்பட கலைஞர்களுக்கு அழைப்பு!

 
பறவை கிளியூர் திருச்சி

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புக்கு பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை சார்ந்த புகைப்பட கலைஞர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் புதிய பறவைகள் காப்பகம் தமிழக அரசு அறிவிப்பு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் எதிர்வரும் 08.03.2025, 09.03.2025 மற்றும் 15.03.2025, 16.03.2025 ஆகிய நாட்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற இருப்பதால் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தினை சேர்ந்த பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை சார்ந்த புகைப்பட கலைஞர்கள் கலந்து கொள்ள துணை இயக்குநர் சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

வண்டலூர் பூங்காவில் கொத்தாக மடிந்த பறவைகள் !பறவைக் காய்ச்சல் எதிரொலி?!

மேற்படி பறவைகள் கணக்கெடுப்பின் போது சிறந்த பறவை ஆர்வலர்கள் மற்றும் சிறந்த புகைப்பட கலைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதும் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு மற்றும் தங்களது வருகை தொடர்பான விவரங்களைப் பதிவு செய்ய 9150896464 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என அம்பாசமுத்திரம் துணை இயக்குநர்/வன உயிரின காப்பாளர் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web