பறவைக் காய்ச்சலைத் தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி... தெலங்கானாவில் மர்ம நோய் பரவி 2,500 கோழிகள் உயிரிழப்பு!

 
கோழி காய்ச்சல்

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் அடுத்த அதிர்ச்சியாக, வனப்பர்த்தி மாவட்டம், மதனபுரம் மண்டலம், கொன்னூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணைகளில் மர்ம நோய் தாக்கி சுமார் 2,500 கோழிகள் உயிர் இழந்துள்ளன. 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனப்பர்த்தியின் மாவட்ட கால்நடை மற்றும் விலங்கு பராமரிப்பு அதிகாரி கே. வெங்கடேஷ்வர், மர்ம நோய் பரவியதை உறுதிப்படுத்தி உள்ளார். சோதனைக்காக ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோழி

கடந்த வாரம் ஆந்திர அரசு பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. மூன்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கால்நடை பராமரிப்பு கூடுதல் இயக்குநர் டாக்டர் சத்யா குமாரி கூறுகையில், "பறவைக் காய்ச்சல் மூன்று மாவட்டங்கள் மற்றும் ஐந்து பண்ணைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் பரவியதால் சுமார் ஒரு லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன'' என்றார்.

முட்டை கோழி

நேற்று, ஆந்திர விவசாயம், கூட்டுறவு, சந்தைப்படுத்தல் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் கிஞ்சராபு அட்சன்னாயுடு பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று உறுதியளித்தார். ஏனெனில் அரசாங்கம் அதன் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web