பறவைக் காய்ச்சல் H5N1 உறுதி… மக்களுக்கு எச்சரிக்கை!
சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காக்களில் பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. வைரஸ் பரவலை தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மர்மமான முறையில் இறந்த காக்கள், கோழிகள் அல்லது பிற பறவைகளை மக்கள் வெறும் கையால் தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறந்த பறவைகளை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும் அல்லது பாதுகாப்பாக எரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறந்த பறவைகளை கையாளும் போது கையுறை, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். பறவைகளின் எச்சங்களை சுத்தம் செய்ய கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மனிதர்களுக்கு பாதிப்பு அறிகுறிகள் எதுவும் இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
