காகங்கள் மரணம்... பறவை காய்ச்சல் அச்சத்தில் மக்கள் பீதி!
சென்னை எர்ணாவூர் பகுதியில் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பொதுமக்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பல இடங்களில் காகங்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்த்த மக்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் காகங்கள் திடீரென இறப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறவை காய்ச்சல் பரவலே இதற்குக் காரணமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே பல பகுதிகளில் காகங்கள் இறந்ததால் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இறந்த பறவைகளை ஆழமான பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கத் தொடங்கியுள்ளனர்.

எர்ணாவூர் பகுதியில் இறந்த காகங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பறவை காய்ச்சல் பரவியதா என்பதை உறுதி செய்ய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படலாம் என தகவல் கிடைக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
