வாட்ஸ்அப்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்… தமிழக அரசின் புதிய வசதி!
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் என அலைந்து திரிய வேண்டிய நிலை இனி இல்லை. பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், சேவைகளை விரைவாக வழங்கவும் தமிழக அரசு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இதன்படி, வாட்ஸ்அப் மூலம் அரசு சேவைகளை பெறும் திட்டம் தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உட்பட மொத்தம் 50 அரசு சேவைகள் வாட்ஸ்அப் வழியாக வழங்கப்பட உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் முன்னிலையில் கையெழுத்தானது. மெடா நிறுவனத்தின் இந்திய தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ், 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி சான்றிதழ்கள் பெறலாம் என அறிவித்தார்.
சான்றிதழ் பெற தேவையான ஆவணங்களை வாட்ஸ்அப்பிலேயே பதிவேற்றம் செய்யலாம். குறுஞ்செய்தி அனுப்பிய சில நாட்களிலேயே சான்றிதழ்கள் வாட்ஸ்அப் மூலமாகவே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலதாமதம் குறையும் என்றும், பொதுமக்களுக்கு அரசு சேவைகள் மேலும் எளிதாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
