பரபரப்பு வீடியோ... பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி.... யாரும் நம்பாதீங்க !

 
பிரியாணி


 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பேமஸான உணவு வகைகளில் ஒன்று பிரிஞ்சி. இந்த கலவை சாதத்தை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலையில் உள்ள பிரிஞ்சி கடைகளில் 20, 30, 40 என்ற வெவ்வேறு கட்டணங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை சைவ பிரியாணி என்கின்றனர்.

 பெரும்பாலான மக்கள் இந்த கடைகளில் உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் இந்த 30 ரூபாய் பிரியாணி தயாரிப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.  

தமிழக அரசு
இதுகுறித்து தமிழக அரசு   அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரி பார்ப்பகம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் இது முற்றிலும் பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் பரவி வரும் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சி அல்ல பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ. இந்த வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி எடுத்து இதனை பதிவிட்டு  பரப்பி வருகின்றனர் இதனை யாரும் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web