மிட்டாய் என நினைத்து வெடியை கடித்த 3 வயது சிறுமி ... உதடு கிழிந்து உயிருக்கு போராடும் கொடுமை!
ஆல்வார் மாவட்டம் சௌகிபாஸ் கிராமத்தில் 3 வயது அக்ஷு, அக்காவுடன் மளிகைக் கடைக்கு சென்ற போது மிட்டாய் என நினைத்து வாயில் வைத்த பொருள் திடீரென வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தால் சிறுமியின் தாடை மற்றும் கன்னம் கடுமையாக காயமடைந்து ரத்தம் கொட்டியது.
சிறுமியை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது ஐ.சி.யு பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். தாடைப் பகுதி சிறப்பு நிபுணர்கள் மூலம் சிகிச்சை பெற்றது.
காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கடைக்காரரை கைது செய்தனர். வெடிப்பொருள் காரணமாக ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குழந்தைகளை தனியாக கடைக்கு அனுப்பும் போது அதிக கவனம் தேவை என்பதையும், அறிமுகமில்லாத பொருட்களை வாங்க வேண்டாம் என்பதையும் எடுத்துரைக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
